ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் யூகன்..!

ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் யூகன்..!

ட்வின்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘யூகன்

அறிமுக இயக்குனர் கமல்.G இயக்கத்தில் தயாராகியிருக்கும் பரபரப்பான திகில் படம் யூகன்.

படத் தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இயக்குனர் கமல், ‘உ’, ‘ஒண்ணும் புரியல’ போன்ற படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கணிப்பொறிக் காட்சிகளை நம்பாமல் ஒப்பனை மூலமே திகில்படுத்தும்விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி ஆறுமுகம் பிரபல ஒளிப்பதிவாளரான சக்தியிடம் பணியாற்றியவர்.

கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் தயாராகிவரும் இப்படம் தமிழ்த் திரையுலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமென இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார்.




error: Content is protected !!