தன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..!

தன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..!

ஜட்பட்மா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘யோகிடா.’

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். ‘வேதாளம்’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் சிங் நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக S.K.பூபதியும், படத் தொகுப்பளராக G.சசி்குமாரும், இசையமைப்பாளராக A. R.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதரியும், சண்டை இயக்குநராக கிருஷ்ணாவும் பணியாற்றவுள்ளனர். இயக்குநர் கௌதம் கிருஷ்ணா, ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதி படத்தை இயக்கவுள்ளார். 

“இந்தப் படத்தின் திரைக்கதை  கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது…” என்கிறார் இயக்குநர் கெளதம் கிருஷ்ணா.

yogida-movie-poojai-stills-5  

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாயகி தன்ஷிகா ‘கபாலி’ படத்தில் ஏற்றிருந்த ‘யோகி’ கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும்வகையில் அமைந்திருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி, ட்விட்டரில் உடனடியாக டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகி தன்ஷிகா உட்பட படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.