‘என்னோடு நீ இருந்தால்’ திரைப்படம் ஜூன் 15-ம் தேதி வெளியாகிறது..!

‘என்னோடு நீ இருந்தால்’ திரைப்படம் ஜூன் 15-ம் தேதி வெளியாகிறது..!

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.யசோதா தயாரித்துள்ள திரைப்படம் ‘என்னோடு நீ இருந்தால்.’

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடித்துள்ளார். மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி,  ரோகிணி,  அஜய் ரத்னம், வையாபுரி,  பிளாக் பாண்டி,  அழகு, மீரா கிருஷ்ணன்,  சஞ்சய்,  சாந்தி, ஆனந்தராஜ்,  பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நாக சரவணன், இசை – கே.கே., படத் தொகுப்பு – ராஜ் கீர்த்தி, கலை இயக்கம் – எஸ்.சுப்பிரமணி, நடன இயக்கம் – கேசவன், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் ஜி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மு.ரா.சத்யா, தயாரிப்பு – எஸ்.யசோதா.

இத்திரைப்படம் வரும் ஜூன் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இது பற்றி இயக்குநர் மு.ரா.சத்யா பேசும்போது, “இத்திரைப்படம் காதல் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக உருவாகியுள்ளது.

நான் யாரிடமும் உதவியாளராக பணி புரிந்ததில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதிய அனுபவத்தை வைத்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன.. ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்.  

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ரசிக்க வைக்கும். சென்சாரில் இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்திருப்பதில் எங்களது படக் குழுவினர் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. படம் வரும்  ஜூன் 15-ம் தேதி வெளியாக உள்ளது…” என்றார்.




error: Content is protected !!