ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா..!

ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா..!

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் தயாரிக்கும் படம் ‘எங் மங் சங்’.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். ‘தேவி’ வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், R.J.பாலாஜி, ‘பாகுபலி’ பிரபாகர்,  ‘கும்கி’ அஸ்வின்,  நாகேந்திர பிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், இசை – அம்ரீஷ், பாடல்கள் – பிரபு தேவா, மு.ரவிகுமார், படத் தொகுப்பு – நிரஞ்சன், பாசில், கலை இயக்கம் – ராஜன்.D, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,  எழுத்து, இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன்.

நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டியவர். அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குநராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இந்த ‘எங் மங் சங்’ படத்தில் டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டண்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை  பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.  முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான இந்த ‘எங் மங் சங்’  படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.