விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் 

விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் 

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் இணைந்து தயாரித்துள்ள 'எமன்' படத்திற்கு சென்சாரில் 'U' சான்றிதழ் கிடைத்துள்ளது.

"எமன் திரைப்படம் ‘U’ சான்றிதழை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு கதாநாயகன் விஜய் ஆண்டனி. தரமான கதையம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் அவருடைய சிறப்பம்சம், எங்களின் 'எமன்' படம் 'யு' சான்றிதழை பெறுவதற்கு பக்கபலமாய் இருந்தது. தற்போது நிலவி வரும் பரபரப்பான  சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு திரைப்படமாக எங்களின் 'எமன்' இருக்கும்" என்று பெருமையுடன் சொல்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.