full screen background image

‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய  வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார்.

‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், கலை இயக்குநர் செல்வக்குமார், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர்கள் அண்ணாமலை, பா.வெற்றிசெல்வன், கோசேஷா மற்றும் ஏக்நாத் ராஜ்  என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

பிரபல நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், அருள் டி.சங்கர், சார்லி மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும்  நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Yaman-Poster-2 

திரையுலகத்தினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார்.

‘எமன்’ படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான கொஞ்சம்  நாட்களிலேயே ‘பேஸ்புக் டிரெண்டிங்’ வரிசையில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, ‘யூ டியூபில்’ ஏறக்குறைய ஆறு லட்சம்  பார்வையாளர்களை பெற்று, யூ டியூப் டிரெண்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தையும்  பெற்றிருக்கிறது இந்த ‘எமன்’  டீசர்.      

இந்த ‘எமன்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜீவா சங்கர், “பொதுவாகவே இதுவரை தமிழில் வந்த அரசியல் படங்கள் அனைத்தும், அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்ட கூடியதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் ‘எமன்’ திரைப்படம் அரசியலை அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே பிரதிபலிக்கும்.

yaman-poster-3

‘எமன்’ படத்தில்  முதல் முறையாக, நம் நாட்டு ஆண் மகன்களின் வீர அடையாளமாக கருதப்படும்  முறுக்கு மீசையை வைத்துக் கொண்டு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

 சமீபத்தில் வெளியான எங்களின்  ‘எமன்’ பட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது, எங்கள் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

யூ டியூபிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் எங்களின் ‘எமன்’ பட டீசர் முன்னிலை வகித்து வருவது, நான்கு முனைகளில்  இருந்தும் விஜய் ஆண்டனிக்கு பெருகி வரும் புகழை உணர்த்துகிறது.

நிச்சயமாக எங்களின் ‘எமன்’ திரைப்படம், சிறந்ததொரு பிரம்மாண்டமான  பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்…” என்று உற்சாகமாக கூறினார்.

 

Our Score