1 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..!

1 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் மிகக் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது.

g.v.prakash kumar

பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது.

இது வெறுமனே யூ டியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்த வெற்றி எங்கள்  கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குநர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

WhatsApp Image 2019-01-13 at 5.50.34 PM (9)

அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடியவிதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன். அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது. உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது…” என்றார்.

g.v.prakash

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவரது படங்களின் வரிசையானது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை தாராளமாக உருவாக்கியுள்ள நிலையில், இப்போது ‘வாட்ச்மேன்’ படமும் சினிமா ரசிகர்களின் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.