17 வயது இளைஞன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘விருது’.

17 வயது இளைஞன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘விருது’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ‘மன்மத ராசா’ புகழ் தீனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சீனிவாசன். சண்டை பயிற்சி – “க்னாக் அவுட்” நந்தா. எடிட்டிங் – துர்காஸ். நடனம் – சர்வஜித், பாடல்கள் – ஆதவன் மற்றும் NTC சரவணன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பதினேழே வயது நிரம்பிய ஆதவன்.

viruthu-movie-stills-2

இப்படம் பற்றி இயக்குநர் ஆதவன் பேசும்போது, “பார்வையற்ற தந்தையை கவனித்துக் கொள்ளும் மகனைப் பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்குமான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.

நன்கு பாடத் தெரிந்த ஒரு கிராமத்து இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைத்துறைக்குள் வந்து மிகப் பெரிய உச்சத்தை அடைகிறான். ஆனால் இந்த வெற்றியே அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.

viruthu-movie-stills-3

படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் இராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்ச் சினிமாவில் பக்திப் பாடல் ஒன்று இப்படத்தின் மூலம் வெளிவர உள்ளது.   இந்த பாடலை அம்மன் மற்றும் முருகனுக்கு இணைந்து சமர்பிக்கும்படி தீனா இசையமைத்துள்ளார்,

இப்படத்தினை தணிக்கைக் குழுவினர் பார்த்து, பாராட்டி, இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குநர் ஆதவன்.




error: Content is protected !!