‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு

‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு

கடந்த வெள்ளியன்று வெளியான ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கினை படத்தின் தயாரிப்பாளரான தாணு இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இன்று மதியம் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் சக்ஸ்ஸ் பிரஸ்மீட்டில் இந்த முழு புள்ளி விபரங்களையும் தாணு வெளியிட்டார்.

thaanu

சென்னை, செங்கல்பட்டு உரிமையை சத்யம் சினிமாஸ் வாங்கியதாக குறிப்பிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு – 6 கோடி 70 லட்சம்

கோவை – 3 கோடி 72 லட்சம்

மதுரை – 2 கோடி 40 லட்சம்

திருச்சி – 2 கோடி 10 லட்சம்

சேலம் – 1 கோடி 95 லட்சம்

வட ஆற்காடு – 1 கோடி 48 லட்சம்

தென் ஆற்காடு – 1 கோடி 65 லட்சம்

திருநெல்வேலி – 1 கோடியே 30 லட்சம்

இதன்படி பார்த்தால் தமிழகத்திலேயே கடந்த 5 நாட்களில் தியேட்டர்கள் மூலமாக கிடைத்த மொத்த வசூல் 21 கோடியே 30 லட்சம் ரூபாயாகும்.

இது தவிர கேரளாவில் 2 கோடியே 75 லட்சம் ரூபாயும், மலேசியாவில் 5 கோடியே 30 லட்சம் ரூபாயும், சிங்கப்பூரில் 1 கோடியே 38 லட்சம் ரூபாயும், அமெரிக்காவில் 1 கோடியே 48 லட்சம் ரூபாயும் வசூலாகியிருப்பதாகத் தெரிவித்தார் தாணு.

இதன்படி பார்த்தால் முதல் 5 நாட்களின் முடிவில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் உலகளாவிய வசூல் தொகை 32 கோடியே 21 லட்சம் ரூபாயாகும்.

வரும் 18-ம் தேதி தெலுங்கிலும், 25-ம் தேதி ஹிந்தியிலும் இந்தப் படம் ரிலீஸாகவிருப்பதால் படத்தின் ஒட்டு மொத்த வசூல் நிச்சயமாக 70 கோடியைத் தாண்டிவிடும் என்பது உறுதி.