விஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..!

விஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த இரண்டாவது படத்தின்  படப்பிடிப்பு மிக விரைவில் முடித்திருக்கிறது.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை YSR ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி படத்தை இயக்கியிருக்கிறார்.

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 4-வது திரைப்படம் இதுவாகும்.

திட்டமிட்டதைவிடவும் மிக வேகமாக படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டு மொத்தக் குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

vijay sethupathy-seenu ramasamy-movie-1

“இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான்கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை எப்படி முடிப்பார்கள் என்பதை பார்க்க காத்திருந்தேன்.

இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றபோதுதான் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் எனர்ஜி மற்றும் அர்ப்பணிப்பை நான் உணர முடிந்தது. ஒவ்வொருவரும் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இறுதியாக, நாங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம், டப்பிங் பணிகளை விரைவில் ஆரம்பிப்போம்” என்றார் YSR ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்.

மேலும் படக் குழுவை பற்றி அவர் கூறும்போது, “விஜய் சேதுபதி சார் மற்றும் சீனு ராமசாமி சார் ஆகியோரின் புரிதலும், ஒருவருக்கொருவர் என்ன தேவை என்பதை மிகச் சரியாக புரிந்து வைத்திருப்பதும் படத்தை மிக வேகமாக முடிக்க காரணமாக இருந்தது.

விஜய் சேதுபதி சார் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நடிகரும், தொழில் நுட்ப கலைஞர்களும் சீனு ராமசாமி சார் என்ன எதிர்பார்ப்பார் என்பதை தெரிந்து வைத்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்கள் மற்றும் அருமையான பின்னணி இசையை கேட்க ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் சுகுமார் சார் ஒவ்வொரு இயக்குனருக்கும் வரம். அவர் சீனு ராமசாமி சாரின் திரைப்படங்களுக்கு மிகச் சிறப்பான காட்சிகளை தருவார். இந்த படமும் விதிவிலக்கல்ல என உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

YSR Films படத்தை திட்டமிடுவதில் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடித்து அதை ரிலீஸ் செய்வதில் பெயர் பெற்றது. அதன் முதல் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அது நிரூபணம் ஆகியிருக்கிறது. ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் அவர்களின் மூன்றாவது தயாரிப்பான  ‘ஆலிஸ்’ மிக விரைவில் தொடங்க இருக்கிறது.

 
error: Content is protected !!