அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். 

தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் – இசக்கி துரை, எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இணைத் தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ், இணைத் தயாரிப்பாளர் – ஆர்.கே.அஜெய்குமார், இசை – நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ, சண்டை இயக்கம் – மிராக்கில் மைக்கேல், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

Director Venkata Krishna Roghanth_1

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும். 

150 வருடம் பழமை வாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு பிரச்சனையை பற்றிப் பேசப் போகிறது. 

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 
error: Content is protected !!