full screen background image

கபடி விளையாட்டைப் பற்றி மீண்டும் பேச வரும் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம்

கபடி விளையாட்டைப் பற்றி மீண்டும் பேச வரும் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம்

2009-ம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்து எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’.

இப்படத்தின் மூலம்தான் நடிகர்கள் விஷ்ணு விஷால், ‘புரோட்டா’ சூரி, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

மீண்டும் இயக்குநர் சுசீந்திரனின் முலக் கதையில் இயக்குநர் செல்வ சேகரனின் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

சாய் அற்புதம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் பூங்காவனம், ஆனந்த் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை – செல்வ கணேஷ், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்.

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக ‘வெண்ணிலா கபடி குழு-2’ படம் அமையும். 

கபடி விளையாட்டை பற்றிப் பிரமாதமாகவும், பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரபல தனியார் வானொலி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ‘வெண்ணிலா கபடி குழு-2’ படக் குழுவினர், மற்றும் நடிகர்கள் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குநர் செல்வசேகரன், ‘பிக்சர் பாக்ஸ்’ அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.

1987-ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண் முண்னே கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் செல்வசேகரன் பாடல் வெளியீட்டின் போது கூறினார்.

இப்படத்தை ‘கருப்பன்’, ‘இரும்புத்திரை’, ‘தர்மதுரை’, ‘அண்ணாதுரை’ ஆகிய படங்களை விநியோகம் செய்த ‘பிக்சர் பாக்ஸ்’ அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.

Our Score