மீண்டும் கபடி விளையாட வரும் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம்

மீண்டும் கபடி விளையாட வரும் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம்

2009-ம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்து எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’.

இப்படத்தின் மூலம்தான் நடிகர்கள் விஷ்ணு விஷால், ‘புரோட்டா’ சூரி, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

இப்போது இயக்குநர் சுசீந்திரனின் முலக் கதையில் இயக்குநர் செல்வசேகரனின் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

சாய் அற்புதம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் பூங்காவனம், ஆனந்த் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை – செல்வ கணேஷ், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்.

“1987-ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த ‘புரோட்டா’ சூரி, அப்புக்குட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொளியில் நடைபெற்ற கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக ‘வெண்ணிலா கபடி குழு-2’ படம் அமையும்…” என்கிறார் இயக்குநர் செல்வசேகரன்.

விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’, ‘இரும்புத்திரை’, ‘தர்மதுரை’, ‘அண்ணாதுரை’ ஆகிய படங்களின் வினியோகஸ்தரான பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.




error: Content is protected !!