‘வெண்ணிலா கபடி குழு பாகம்-2’ பூஜையுடன் துவங்கியது..!

‘வெண்ணிலா கபடி குழு பாகம்-2’ பூஜையுடன் துவங்கியது..!

கடந்த ஏழு வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’.

இப்படம் மூலம் விஷ்ணு விஷால், சூரி, அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘வெண்ணிலா கபடி குழு-2’ என்கிற பெயரில் இப்போது தயாராகவுள்ளது.

இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்பு குட்டி, லக்ஷ்மி, பாவா லக்ஷ்மணன், திருமா, விஜய் கணேஷ், பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மூலக் கதை – சுசீந்திரன், இசை – V.செல்வகணேஷ், ஒளிப்பதிவு-E.கிருஷ்ணா, படத்தொகுப்பு – காசி விஸ்வநாதன், கலை – சக்தி வெங்கட்ராஜ்.M, சண்டை பயிற்சி – அனல் அரசு, தயாரிப்பு – A. பூங்காவனம் , N.ஆனந்த. கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வசேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.