‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் ‘வீராபுரம்’ திரைப்படம்

‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் ‘வீராபுரம்’ திரைப்படம்
'அங்காடி தெரு' மகேஷ் நாயகனாகவும், புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் 'வீராபுரம்'.
இப்படத்தை  ஸ்ரீவைசாலி மூவி மேக்கேர்ஸ்  சார்பில் குணசேகர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநரான செந்தில் குமார் இயக்குகிறார்.  ஒளிப்பதிவு - செல்வமணி, இசை - ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர், படத் தொகுப்பு - கணேஷ்.
இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவின் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.