‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும், தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி, தனது அடுத்தப் படத்தில் மிஷ்கினுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்தப் புதிய படத்தை RA Studios  சார்பாக தயாரிப்பாளர் C.R.மனோஜ்  குமார் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன், இசை – டர்புகா சிவா, பாடல்கள் – வைரமுத்து, கபேர் வாசுகி, ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பு – நாகூரான், கலை இயக்கம் – ராமு, சண்டை பயிற்சி – தினேஷ் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில்.

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இயக்குநர் தியாகராஜா  குமாரராஜாவிடம்  இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘இறுதி சுற்று’ படத்தின் வசனங்களை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னமும் பெயரிடப்படாத இத்திரைப்படம் அனைத்து  தரப்பு  ரசிகர்களையும் ஈர்க்கும்படியான  திரைக்கதையில்  ஆக்சன்  திரில்லராக  பெரும்பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது.

இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும்  ஒவ்வொரு  வகையாக  இருக்குமாம். சண்டை பயிற்சியாளர் தினேஷ் சுப்பராயன் அந்த அளவுக்கு சண்டை பயிற்சியில்  புதிய யுக்தியை இந்தப் படத்திற்காக வடிவமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இன்னுமொரு சிறப்பம்சமாக இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்,  நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.