‘வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் நடிகை அனிஷா அம்ப்ரோஸ்..!

‘வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் நடிகை அனிஷா அம்ப்ரோஸ்..!

கன்னட திரைப்படமான ‘கர்வ்வா’ மற்றும் பன்மொழி திரைப்படமான ‘மனமந்தா’ (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அனிஷா அம்ப்ரோஸ், ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்து வைக்கிறார். 

லாபிரிந்த் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் அனிஷா அம்ப்ரோஸ், சிபி புவனசந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்காமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சிறப்பான பின்னணி இசையை அமைப்பதில் வல்லவரான சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

anisha ambrosh-2

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை அனிஷா அம்ப்ரோஸ் பேசுகையில், “இந்த ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படம் வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை.  படத்தின் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் செய்தி சேகரிக்கும்போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தேனா என்பது என்பதுதான் என் கதாபாத்திரம் சொல்ல வரும் கதை.

ஸ்கைப் மூலம்தான் எனக்கு ஸ்கிரிப்டை விளக்கினார் இயக்குநர் மனோஜ். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. தவிர, என் முந்தைய படங்களை அவர் பார்த்திருப்பாரா என்று எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. பின்னர்தான், நான் அந்த பாத்திரத்திற்காக பரிசீலிக்கப்பட்டேன். நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது, எல்லாம் சரியாக அமைந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி..” என்றார் சந்தோஷத்துடன்..!




error: Content is protected !!