நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ்-வாணி போஜன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்..!

நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ்-வாணி போஜன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்..!

நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது 2-வது தயாரிப்பினை தற்போது துவக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் நிதின் சத்யா ‘ஷ்வேத் – எ நிதின் சத்யா புரொடெக்சன்ஸ் ஹவுஸ்’ என்ற தன்னுடைய சொந்த நிறுவனத்தின் சார்பில் சென்ற ஆண்டு ‘ஜருகண்டி’ படத்தினை தயாரித்து வெளியிட்டது நினைவிருக்கலாம்.அத்திரைப்படம் தந்த பூஸ்ட்டோடு தனது அடுத்தப் படத்தையும் துவக்கியிருக்கிறார்.

இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன் நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் ஒரு முக்கிய சர்ப்ரைஸும் இந்தப் படத்தில் இருக்கிறது.

vaani bojan

ஒளிப்பதிவு – சந்தானம் சேகர், இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த், சண்டை இயக்கம் – மிராக்கில் மைக்கேல்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் மோகன்ராஜாவிடம் இயக்குதல் பணியைப் பயின்றவர்.

கிரைம், சஸ்பென்ஸ் திரில்லர் டைப்பில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.