தனுஷின் ‘வட சென்னை’ படத்தின்  டிரெயிலர் ஜூலை 28-ம் தேதி வெளியீடு.!

தனுஷின் ‘வட சென்னை’ படத்தின்  டிரெயிலர் ஜூலை 28-ம் தேதி வெளியீடு.!

‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறனின்  இயக்கத்தில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் படம்  ‘வட சென்னை’.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்  சந்தோஷ் நாராயணன் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ்,  ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். தனுஷ் – வெற்றி மாறன்   இந்த கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்தப் படத்தில்  சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். 

மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியிடுவதாக படக் குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்தப் படத்தினை லைகா புரொடெக்சன் நிறுவனம் பிரமாண்டமான முறையில் வெளியிடவுள்ளது.
error: Content is protected !!