‘வாண்டு’ திரைப்படம் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிறது..!

‘வாண்டு’ திரைப்படம் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிறது..!

MM POWER CINE CREATIONS நிறுவனத்தின்   சார்பில்  தயாரிப்பாளர்கள் N.முனியாண்டி, மதி எட்டியான்  இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாண்டு’.

இந்தப் படத்தில் சீனு, ஆல்வின், எஸ்.ஆர்.குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, மெட்ராஸ் ரமா, வின்னர் ராமச்சந்திரன், ரவிஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

இசை – A .R.நேசன், ஒளிப்பதிவு – ரமேஷ் V.மகேந்திரன், படத் தொகுப்பு – ப்ரியன், கலை இயக்கம் – J.P.K.பிரேம், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், பாடல்கள் – மோகன்ராஜ், நடன இயக்கம் – பாபி ஆண்டனி, கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம் – வாசன் ஷாஜி.

இயக்குநர் செல்வராகவனின் உதவியாளரான வாசன் ஷாஜி, இந்தப் படத்தை இயக்குகிறார்.

விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் சொல்வார்கள். அதைக் கதைக் கருவாகக் கொண்டுதான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் வாசன் ஷாஜி பேசுகையில், “1971-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப் படம். 

ஆனாலும், தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா.. நானா… போராட்டம்தான் இப்படத்தின் விறுவிறுப்பான கதை.

 வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தையும்  எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதேநேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன், பரபரப்பான படமாகவும் இது இருக்கும்…” என்றார்.

எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை, ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் நிறுவனம் வரும் பிப்ரவரி 8-ம் தேதியன்று  உலகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.




error: Content is protected !!