நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘வாண்டு’ படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘வாண்டு’ படத்தின் பர்ஸ்ட் லுக்

1970 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக நடந்த குத்துச் சண்டையை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘வாண்டு.’ 

வட சென்னையில் மறைமுகமாக  நடக்கும் குத்துச் சண்டையில்  கலந்து கொள்ளும் குப்பை பொறுக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை. இப்படத்தின்  பர்ஸ்ட் லுக்கை  சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

vaandu movie poster

இயக்குநர் வாசன் ஷாஜி இது பற்றி பேசும்போது, “இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட பல ஹீரோக்களிடம் கேட்டோம். ஆனால் சூழ்நிலை சரியாக அவர்களுக்கு அமையவில்லை. அதனால் தயங்கினார்கள்.

ஆனால், ‘வேலைக்காரன்’ படத்தின் டப்பிங் மற்றும் இயக்குநர் பொன்ராமின் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹீரோ சிவகார்த்திகேயனிடம் கேட்ட உடனேயே ‘ஓகே பிரதர். பண்ணிக்கலாம்…’ என்றார்.

அதேபோல் படக் குழுவினரை அன்புடன் வரவேற்று படம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்வையிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்றார். ‘உங்களுடைய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். படம் நிச்சயமாக வெற்றியடையும்’ என்றும் மனதார வாழ்த்தினார். அவருடைய இந்த வாழ்த்துக்களே படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்…” என்றார் இயக்குநர் வாசன் ஷாஜி.




error: Content is protected !!