கலகலப்பான குழந்தைகளுக்கான படம் ‘வானரப் படை’

கலகலப்பான குழந்தைகளுக்கான படம் ‘வானரப் படை’

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானரப் படை.’ 

இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர்,  மற்றும் கதாசிரியருமான அண்ணாதுரை கண்ணதாசனின் மகன் முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார்.

கதையின் நாயகியாக விளம்பரப் பட உலகில் பிரலமான சிறுமியான அவந்திகா அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகைகள் நடித்த பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருடன்  அனிருத்,  நிதிஷ்,  நிகில்,  அனிகா,  வைஷ்ணவி,  ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர்,  சிறுமியர்கள் வானரப் படைகளாக நடிக்கிறார்கள்.  9  வயதிலிருந்து  11  வயதுவரை உள்ள சிறுவர்,  சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்றும் பஞ்சு சுப்பு, நமோ நாராயணன்,  ஜீவா ரவி  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – லோகி. இவர் இயக்குநர் கே.ஆர். இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.  படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்,  கலை – A.சண்முகம், தயாரிப்பு – ஸ்ரீருக்மணி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – M.ஜெயப்பிரகாஷ்.

இயக்குநர் ஜெயப்பிரகாஷ் இயக்குநர் கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்ததுடன் ‘நேர் எதிர்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் M.ஜெயப்பிரகாஷ் பேசியபோது, “ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக உருவாகவுள்ளது  இந்த ‘வானரப் படை’.

பெற்றோர்களுக்கும்,  அவர்களது குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளிதான்  மிகப்  பெரிய  விரிசலை  ஏற்படுத்திவிடுகிறது.  படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது…” என்றார்.
error: Content is protected !!