தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..!

தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..!

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பாடகரான சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.

ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கையாள, ப்ரீதா கேமராவை இயக்குகிறார். கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, சங்கத்தமிழன் படத் தொகுப்பைக் கவனிக்கிறார். சண்டை இயக்கத்தை சாமும், சிகை அலங்காரத்தை சண்முகமும் செய்கிறார்கள். விஜி சதீஷ் நடனத்தை கையாளுகிறார். 'வானம் கொட்டட்டும்' படத்தின் இசை லேபிள் சோனி. இயக்குநர் தனா படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரவிருக்கிறது.