பேரரசு கதை, வசனத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘வாடா மவனே’..!

பேரரசு கதை, வசனத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘வாடா மவனே’..!

‘நாளை’, ‘சக்கரவியூகம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘கதம் கதம்’ ஆகிய வெற்றிப் படங்களின் ஹீரோ ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ்.

தற்போது ‘போங்கு’, ‘எங்கிட்ட மோதாதே’ ஆகிய படங்களில் நடித்து வரும் நட்டி நட்ராஜ் மூன்றாவதாக ‘வாடா மவனே’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

கவிபாரதி கிரியேஷன்ஸ் என்கிற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு இயக்குநர் பேரரசு கதை, வசனம் எழுதுகிறார். கவிஞர் பிறைசூடனின் மகனான கே.ஆர்.கவின் இசையமைக்கிறார். ‘மகாராணி கோட்டை’ படத்தை இயக்கிய ஆர்.வினோத்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

படத்தில் நட்டி நட்ராஜூக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலைவீசி தேடி வருகிறார்களாம்.
error: Content is protected !!