தினேஷ், நந்திதா நடித்த ‘உள் குத்து’ டிசம்பரில் வெளியாகிறது..!

தினேஷ், நந்திதா நடித்த ‘உள் குத்து’ டிசம்பரில் வெளியாகிறது..!

‘P.K.Film Factory’ சார்பில் தயாரிப்பாளர்கள் G.விட்டல் குமார், G.சுபாஷினி தேவி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உள் குத்து’.

தினேஷ் மற்றும் நந்திதா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார்.

‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குநர் கார்த்திக் ராஜு, நடிகர் தினேஷோடு இணைவதும், ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும்.

UK-5889

‘உள் குத்து’ படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் G.விட்டல் குமார் பேசுகையில், ”தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது.  சமீபத்தில்கூட வெற்றி பெற்ற தரமான படைகள் இதற்கு சான்று.

இந்த நிலையில்  ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே  சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குநர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில்  எங்களுக்கு  பெரும் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் சினிமா ரசிகர்கள் ‘உள் குத்து’ படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.