உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் படம் துவங்கியது..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் படம் துவங்கியது..!

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகரம்’ திரைப்படம் தமிழாக்கம் செய்யப்படுகிறது.

இந்த்த் தமிழ்ப் படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக  நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகளை வென்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் பதிப்புக்கு இன்னமும் பெயர் சூட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகையான நமீதா பிரமோத் ஆகியோர் நாயகிகளாக  நடிக்க… இவர்களுடன் சமுத்திரக்கனி, எம்.எஸ். பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர்.

படத்திற்கு சமுத்திரக்கனி வசனம் எழுத, தர்புகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் 4 பிரேம்ஸ் ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது.  

வருகின்ற 19-ம் தேதி எழில் கொஞ்சும் குற்றாலம், தென்காசி ஆகிய  இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து  நடைபெற உள்ளது. 

இயக்குநர் பிரியதர்ஷனும், உதயநிதியும் இணைந்து பணியாற்றும் முதல் படமான, இத்திரைப்படம்  மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.




error: Content is protected !!