full screen background image

‘யு-டர்ன்’ படத்தை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..!

‘யு-டர்ன்’ படத்தை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..!

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய். கம்பைன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘யு டர்ன்’.

கன்னடத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில், அதே பெயரில் ரீமேக் செய்கிறார்கள். கன்னட மூலத்தை இயக்கிய இயக்குநரான பவன்குமாரே இந்த தமிழ்ப் பதிப்பையும் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைக்க, சுரேஷ் ஆறுமுகம் படத் தொகுப்பு செய்துள்ளார். ஏ.எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படம் தற்போது வெளியீ்ட்டு தயாராகி நிற்கிறது. இந்தப் படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் கூறும்போது, “எங்கள் நிறுவனமான BOFTAல் எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களுக்கான தரமான படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளோம். ‘யு-டர்ன்’ தயாரிப்பாளர்களுடன் வியாபார ரீதியில் இணைந்தது நிச்சயமாக BOFTA-க்கு மிகப் பெரிய சாதனையாகும்.

குறைந்த காலத்திலேயே யூ டியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த படத்தின் சிறப்பான ட்ரைலர் முதல், இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாமே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கொண்டது.

புதுமையான அணுகுமுறையுடன் இந்தத் திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களான ஸ்ரீனிவாச சித்தூரி (ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்) மற்றும் ராம்பாபு பண்டாரு (ஒய்.வி கம்பைன்ஸ் மற்றும் BR8 கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார். 

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி கூறும்போது, “இந்த திரைப்படத்திற்காக தனஞ்செயன் போன்ற ஒரு அனுபமிக்க தயாரிப்பாளருடன் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய கௌரவம். அவரது திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு உத்வேகம் அவர். அவரிடம் இருந்து இந்த ‘யு-டர்ன்’ படத்தை சிறந்த முறையில் கொண்டு சேர்க்க கூடுதலாக விஷயங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.

தயாரிப்பாளர் ராம்பாபு பண்டாரு கூறும்போது, “நாங்கள் மொத்த குழுவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். தனஞ்செயன் அவர்களின் புதுமையான அணுகுமுறை அவரது மிகப் பெரிய யு.எஸ்.பி. அது இப்போது எங்கள் படத்துக்கும் கிடைத்ததை  மதிப்புமிக்க தருணமாக நினைக்கிறேன்” என்றார்.

Our Score