இரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும்  ‘டக்கர்’ ! 

இரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும்  ‘டக்கர்’ ! 

தற்போது வெளியாகும் முக்கால்வாசி தமிழ்த் திரைப்படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாமல் இடம் பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார்.

தனக்கே உரித்தான காமெடி பஞ்சுகளால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்போது நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து வரும் ‘டக்கர்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் யோகி பாபு. இந்தப் படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இசை – நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன் முருகேசன், படத் தொகுப்பு – கா.கெளதம், கலை இயக்குநர் – உதயகுமார், பாடல்கள் – கு.உமாதேவி, கு.கார்த்திக் மற்றும் அறிவரசு, சண்டை இயக்கம் தினேஷ், காசி,  உடை அலங்காரம் – பிரியங்கா பிருத்விராஜன், நடன இயக்கம் – சதீஷ் மற்றும் ஸ்ரீதர், விளம்பர வடிவமைப்பு – ட்டூனி ஜான், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.குமார். 

yogi babu

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜி.கிரிஷ், “இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும்போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் இந்த ‘டக்கர்’.

படத்தில் யோகிபாபுவின் கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும்…” என்றார்.




error: Content is protected !!