ZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..!

ZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..!

‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ போன்ற வெற்றி படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் மனதையும் கவர்ந்த குரு சோமசுந்தரம், இப்போது இணைய தொடர்களிலும்(வெப் சீரீஸ்களிலும்) தன் திறமையை வெளிப்படுத்தி  தடம் பதிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் சோமசுந்தரம், தற்போது ‘டாப்லெஸ்’ (Topless) என்னும் ஒரு வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்தியாவின் மிக வேகமாக வளரும் OTT தளமான Zee5, இந்த வெப் சீரிஸ்ஸை இயக்குநர் கே.எஸ்.சினீஷின் Soldiers Factory நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறது.

திறமையான நடிகர்கள் மட்டுமின்றி திறமையான டெக்னீசியன்களையும் கொண்டுள்ளது ‘டாப்லெஸ்’ எனும் இத்தொடர்.

‘பாண்டிய நாடு’ படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய ஹரிஷ் உத்தமன், ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘மாநகரம்’ போன்ற வெற்றி படங்களில் வில்லனாக நடித்த அருண் அலெக்சாண்டர், ‘சென்னை டு சிங்கப்பூர்’ எனும் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த், மற்றும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் தயாரிப்பாளரான பசாக் ஆகியோர் இந்த இணையத் தொடருக்கு (வெப் சீரிஸூக்கு) தங்கள் நடிப்பின் மூலம் பலம் சேர்க்க உள்ளனர்.

விஷால் விஜயன் மற்றும் விஷ்வேஷ் என்னும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இத்தொடரில் பணியாற்ற உள்ளனர். அதேபோல், அம்ரித் ராவ் மற்றும் அரவிந்த் வெங்கடேஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இத்தொடரில் பணிபுரிய உள்ளனர்.

இயக்குநர் தினேஷ் மோகனும், எழுத்தாளர் சன் மார்கனும் இணைந்து இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் இயக்குநர்  சினீஷின் இரண்டாவது தயாரிப்பாகும். நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து வெற்றி பெற்ற ‘பலூன்’ திரைப்படத்தை இயக்கிய சினீஷ், இந்த வெப் சீரிஸ் தவிர மேலும் ஒரு முழு நீள திரைப்படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வெப் சீரிஸின் தலைப்பே, இதற்கான எதிர்பார்ப்பை பெரிதும் கூட்டியிருக்கிறது…!




error: Content is protected !!