full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 24, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 24, 2015

பக்ரீத் பண்டிகையை ஒட்டி வியாழக்கிழமையான இன்றைக்கே 6 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன. நாளை செப்டம்பர் 25 வெள்ளியன்று ராம்லீலா என்ற தெலுங்கு டப்பிங் படம் ரிலீஸாகிறது.

1. கிருமி

kirumi-poster-2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார்.  JPR பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரேஸ்மி மேனன் நாயகி. இவர்களுடன் சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட் சாலமன், தீனா, ‘நான் மகான் அல்ல’ மகேந்திரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பி.சி.ஸ்ரீராமின் மாணவர். கே இசை அமைக்கிறார். அனு சரண் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

2. குற்றம் கடிதல்

kutram kadithal-poster-2

இந்தப் படத்தில் ராதிகா பிரஷிதா, அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு-எஸ்.மணிகண்டன், படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம், இசை – ஷங்கர் ரஙகராஜன், தயாரிப்பு ஜெ.சதீஷ்குமார், கிறிஸ்டி சிலுவப்பன், எழுத்து-இயக்கம் – ஜி.பிரம்மா.

3. உனக்கென்ன வேணும் சொல்லு

இந்தப் படத்தில்  தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி, ‘மைம்’ கோபி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

uvs-poster-1

ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி, படத் தொகுப்பாளர் –ஹரிஹரன், இசை – சிவ சரவணன், கலை இயக்குனர் – CH மோகன்ஜி, கதை – MRK & ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பு – N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின், இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம்.

4. ஜிப்பா ஜிமிக்கி

இந்தப் படத்தை 3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் பிரபல கன்னட தயாரிப்பாளர் ஜி.வி.திவாகர் தயாரித்திருக்கிறார். கிரிஷ் திவாகர் ஹீரோவாக நடித்திருக்கிறார். குஷ்பு பிரசாத் என்னும் வங்க மொழி தாரகை ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

jippa jimikki-poster-1

மேலும் ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘தாயுமானவன்’ மதி, பாவா லட்சுமணன், போண்டா மணி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சரவண நடராஜன், இசை – ரனீப், எடிட்டர் – சுதா, பாடல்கள் – மோகன்ராஜன், கலை இயக்கம் – ஆர்.விஜயகுமார தொண்டைமான், சண்டை பயிற்சி – ராஜேஷ் கண்ணா, எழுத்து-இயக்கம் – ரா.ராஜசேகர்.

5. திருட்டு விசிடி

இந்தப் படத்தில் பிரபா, சாக்ஷி அகர்வால், தேவதர்ஷினி, செந்தில், மனோ, காதல் சுகுமார், ரீத்து, விச்சு விஸ்வநாத் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

thiruttu vcd-poster-1

ஒளிப்பதிவு – என்.எஸ்.ஜெகதீஷ், எடிட்டிங் – சதீஷ் பி.கொட்டாய், இசை – ஜிதின் ரோஷன், பாடல்கள் – இளஞ்சேரன், முருகன் மந்திரம், கலை இயக்கம் – ரவீந்திரன், சண்டை பயிற்சி – ஹார்ஸ் சுரேஷ், நடனம் – ராதிகா, தீனா, தயாரிப்பு – பி.சந்திரன், பி.மோகன், இயக்கம் – காதல் சுகுமார்.

6. காதல் அகதி

kaathal agathi-poster-1

ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம். ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘காதல் அகதி’.

இதில் ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர், திருச்சி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ், இசை    –   பர்கான் ரோஷன், கலை   –  பத்மநாபன், எடிட்டிங்   –  அஹமத், நடனம்   –   ராதிகா, ஸ்டண்ட்   –  மிரட்டல் செல்வம், பாடல்கள்   –   விவேகா, தயாரிப்பு மேற்பார்வை   –   கார்த்திகேயன், நிர்வாக தயாரிப்பு   –   சிவகுமார், தயாரிப்பு    –  ஓசூர் எம்.ராமய்யா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷாமி திருமலை.

ராம்லீலா – தெலுங்கு டப்பிங் படம்

தெலுங்கில் சென்ற ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கோவிந்துடு அந்தரிவடலே’. தெலுங்குலகின் ஹாட்டஸ்ட் இயக்குநரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணவம்சிதான் இந்தப் படத்திற்கு கதையெழுதி இயக்கியிருந்தார்.

இதில்  சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இப்போது ‘ராம்லீலா’ என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக  RAFI MATHIRA  இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு   –  சமீர்ரெட்டி, எடிட்டிங்     –   நவீன் நூலீ, இசை – யுவன்சங்கர்ராஜா, பாடல்கள் – பரிதி, ஸ்டண்ட்  –  பீட்டர்ஹெய்ன்  –  ராம்லக்ஷ்மன், கலை  –  அசோக்குமார், எழுத்து-இயக்கம் –  கிருஷ்ண வம்சி, தயாரிப்பு   –   RAFI MATHIRA  

Our Score