இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 15, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 15, 2015

பொங்கல் திருநாளான இன்று ஜனவரி 15, 2015 வியாழக்கிழமையன்று 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1. ஆம்பள

aambala-movie-poster

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்திருக்கிறார். அவரே ஹீரோவாக நடிக்க ஹன்ஸிகா மோத்வானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

மேலும் வைபவ், சதீஷ், சந்தானம், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, துளசி, கிரண், விஜயகுமார், பிரபு, விச்சு, மனோபாலா  மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.  கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா டீம் இசையமைத்திருக்கிறார்கள். என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார்.

2. டார்லிங்

darling-movie-poster

ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன.

இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். நிக்கி கல்ரானி, சிருஷ்டி டாங்கே, கருணாஸ், பாலா, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமாரும், அருண்ராஜாவும் எழுதியிருக்கிறார்கள். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். சாம் ஆண்டன் இயக்கம் செய்திருக்கிறார்.
error: Content is protected !!