“மிஷ்கினின் வாய்க்கொழுப்பினால்தான் முன்பே சேர முடியாமல் போனது…” – விஷாலின் கிண்டல் பேச்சு..!

“மிஷ்கினின் வாய்க்கொழுப்பினால்தான் முன்பே சேர முடியாமல் போனது…” – விஷாலின் கிண்டல் பேச்சு..!

தமிழக அரசியல் போலத்தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணிதான் இப்போது நடிகர் விஷாலும், இயக்குநர் மிஷ்கினும் இணைந்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படம்.

விஷாலும், மிஷ்கினும் ‘முகமூடி’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். ‘முகமூடி’யின் கதை முதலில் விஷாலுக்குத்தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால், இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு மட்டும் அப்படியேதான் இருந்திருக்கிறது.

Thupparivaalan (3)

இதைப் பற்றி பேசிய நடிகர் விஷால், “நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணனும்ன்னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடியே பேச ஆரம்பித்தோம். இந்த எட்டு வருடங்களில் சேர்ந்து படம் பண்ண, மூன்று முறை வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் மிஷ்கினின் வாய்க்கொழுப்பினாலேயே அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு.

அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட அவர் எப்படிப் பேசினாலும் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான் இருப்பேன்.. இப்படித்தான் பேசுவேன்’னு தன் நிலையில் விடாப்பிடியா நின்னதால நாங்கள் இருவரும் சேரும் வாய்ப்புத் தள்ளிப் போனது. அது எட்டு வருடங்கள் கழித்து, இப்போது இந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கு.

myskin

சேர்ந்து படம் பண்றோம்னு முடிவானதும், ‘எந்த மாதிரியான படம் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க’ன்னு கேட்டார். கேட்டதோடு இல்லாமல் மூணு ஜானர்கள்ல வெவ்வேறு கதைகளை என்னிடம் சொன்னார்.

‘ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இல்லாமல் ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரியான ஒரு ஜானர் இருக்கு’னு சொல்லிட்டு அவர் சொன்ன லைன்தான் இந்தக் கதை. இது நிச்சயம் என் கேரியரில் ஒரு தரமான படமாக இருக்கும். தொடர்ந்து டிடெக்டிவ் சீரிஸா இதைப் பண்ணலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறோம்…” என்றார்.

மிஷ்கினும், விஷாலும் இணைந்திருக்கும் இந்த ‘துப்பறிவாளன்’ படம் இருவருக்குமே ஃப்ரெஷாக இருக்கும் என்பது டீசர் மற்றும் மேக்கிங்கிலேயே தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான விறுவிறுப்பான ஸ்டைலிஷான துப்பறியும் படங்களுக்கு விதை போட்டிருக்கிறார்கள் நடிகர் விஷாலும், இயக்குநர் மிஷ்கினும்.