லண்டனில் இன்று துவங்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம்

லண்டனில் இன்று துவங்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம்

துப்பறியும் கதை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்புவர்.

அந்த வகையில், விஷால் நடித்து மிஷ்கின் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லராக 2017-ம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

விஷால் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படத்தில் விஷாலுடன் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

தற்போது, ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘துப்பறிவாளன்-2’ உருவாகவுள்ளது. இப்படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். கலை இயக்குநராக கிரவுன் ஃபோர்ட் பணியாற்றுகிறார்.

விஷால் நாயகனாக நடிக்க, புதுமுகம் ஆஷ்யா(ASHYA) நாயகியாக நடிக்கிறார். மேலும் நாசர், ரஹ்மான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் உடன் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (04.11.2019) லண்டனில் துவங்குகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
error: Content is protected !!