தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். ஹன்ஸிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், சண்டை இயக்கம் – அன்பறிவ், கலை இயக்கம் – மாயபாண்டி, பாடல்கள் – புலமைப்பித்தன், பா.விஜய், ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயணன், உடைகள் – பெருமாள் செல்வம், 2-வது யுனிட் இயக்குநர் – எம்.செந்தில் விநாயகர், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், ஸ்டில்ஸ் – முன்னா, விஷூவல் எபெக்ட்ஸ் – பிரவின்-டி.ஜெகதீஷ், கிராபிக்ஸ் – சேது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வெங்கடேசன், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

இந்தியாவின் மிகச் சிறந்த கதாசிரியர்களில் ஒருவரான ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய இயக்குநருமான தினேஷ் செல்வராஜ், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். 

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுண்ட்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். தன் வாழ்க்கையை மாற்றிப் போட்ட ஒரு வழக்கினை விக்ரம் பிரபு தீர விசாரிப்பதுதான் படத்தின் கதை.

Thuppaakki Munai-Movie-Stills-1

“செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக…” படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.

“கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், ‘துப்பாக்கி முனை’ படத்தின் கதையும், கதைக் களமும் வித்தியாசமாக இருந்ததால்தான் இப்படத்தில் நடித்ததாக” நாயகன் விக்ரம் பிரபு கூறுகிறார்.

“இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடித்திருக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும்..” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான ராசாமதி.

சமீபத்தில் வெளியான ‘துப்பாக்கி முனை’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ராட்சசன்’ ஆகிய கிரைம், திரில்லர் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் அதே ஜானரில் வரவிருக்கும் இந்த ‘துப்பாக்கி முனை’ படத்திற்கும் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது..!

படம் விரைவில் வெளியாகவுள்ளது..!




error: Content is protected !!