‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..? போட்டி அறிவிப்பு..!

‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..? போட்டி அறிவிப்பு..!

‘துமாரி சுலு’ என்ற பெயரில் இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படத்தை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தயாரிக்கிறார்.

ஜோதிகா – விதார்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

ஜூன் 2018 முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக இப்போதே ஒரு புதிய திட்டத்தை தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.

இதன்படி படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்து மிகச் சரியாகச் சொல்பவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதற்கான க்ளூவையும் படக் குழுவினரே அறிவித்திருக்கிறார்கள்.

  1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.
  1. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.
  1. மற்றுமொரு வார்த்தை ஒரு எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.

ஒருவர் எத்தனை பதில்களை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொடுத்து போட்டியில் பங்கேற்கலாமாம்.

சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். மேலும், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் படக் குழுவினருடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதே உங்கள் சிந்தனையைத் தட்டி விடுங்கள் உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பதில்களை பதிவு செய்ய வேண்டிய முகவரி :

FORM LINK : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform

 
error: Content is protected !!