போதைக்கு அடிமையான மாணவர்கள் பற்றிய திரைப்படம் ‘துலாம்’..!

போதைக்கு அடிமையான மாணவர்கள் பற்றிய திரைப்படம் ‘துலாம்’..!

'வி மூவிஸ்' சார்பில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் தயாரித்துள்ள திரைப்படம் ‘துலாம்’.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடித்திருக்கிறார்.  இவர்களுடன்  முக்கிய கதாபாத்திரங்களில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே மற்றும் 'ஈரமான ரோஜாவே' புகழ் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷும்  நடித்திருக்கிறார்.

இசை - அலைக்ஸ் பிரேம்நாத், ஒளிப்பதிவு - கொளஞ்சி குமார், படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ். நடனம் – ஷங்கர், சண்டை பயிற்சி – ரமேஷ், பாடல்கள் - நா.முத்துக்குமார், கானா பாலா, நதி விஜயகுமார், கலை – ஜெயவர்மா, ஸ்டில்ஸ் – ஷிவா, டிசைன்ஸ் - சசி & சசி, தயாரிப்பு நிர்வாகம் - குணசேகரன், தண்டபாணி,  தயாரிப்பு நிறுவனம் - வி மூவிஸ், தயாரிப்பாளர் – விஜய் விக்காஷ், எழுத்து, இயக்கம் – ராஜ நாகஜோதி.

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும்,  மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறைய பேர் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.

இதன் படப்பிடிப்பு முழுவதும்  சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில்  நடந்து முடிந்திருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில்தான் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.