உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்

தமிழ்ச் சினிமாவில் மண்ணும், மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்தான். உண்மைக் கதைகள் திரைப்படமாக மாறும்போது நிச்சயமாக வெற்றியைத் தொடும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம்தான் ‘தொரட்டி’ எனும் தலைப்பில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. 

இந்தப் படத்தை ஷமன் பிக்சர்ஸ் சார்பில்  தயாரிப்பாளர் ஷமன் மித்ரூ தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷமன் மித்ரூ ஹீரோவாக அறிமுகமாகிறார். சத்ய கலா என்னும் புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சுந்தர்ராஜ், ஜெயசீலன், முத்துராமன், அழகு, குமணன், ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – ஷமன் பிக்சர்ஸ், தயாரிப்பு – ஷமன் மித்ரூ, வசனம், இயக்கம் – பி.மாரிமுத்து, ஒளிப்பதிவு – குமார் ஸ்ரீதர், இசை (பாடல்கள்) – வேத்சங்கர், பின்னணி இசை  – ஜித்தின் ரோஷன், ஒலி வடிவமைப்பு –பரணிதரன், பாடல்கள் – சினேகன், படத் தொகுப்பு – A.M.ராஜா முகமது, மக்கள் தொடர்பு – மணவை புவன்.

1980 காலகட்டத்தில் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த ‘தொரட்டி’.

கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம்தான் இந்தத் ‘தொரட்டி’.

ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாரம்… இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள்தான் ‘தொரட்டி’.

இதில் ‘மாயன்’ எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக ‘செம்பொன்னு’ எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் ‘நல்லையா’வாக அழகு.. மேலும் ‘சோத்து முட்டி’. ‘ஈப்புலி’, ‘செந்தட்டி’ எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..!




error: Content is protected !!