‘தூங்காவனம்’ படத்திற்கு U/A சான்றிதழ்..!

‘தூங்காவனம்’ படத்திற்கு U/A சான்றிதழ்..!

வரும் நவம்பர் 10 தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் தூங்காவனம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இதுதான் கிடைக்கும் என்பது அந்தப் படக் குழுவினருக்கே தெரிந்த விஷயம்தான் என்பதால் அவர்களு்ககு அதில் ஆச்சரியமில்லை. படத்தில் போதை பொருட்களின் அறிமுகம், என்கவுண்ட்டர், துப்பாக்கிகளி் விளையாட்டு என்று நிறைய இருப்பதால் இதில் தவறி்லலை என்றும் சொல்லலாம்..!

படத்தின் கதைப்படி போதை மருந்து கடத்தலை தடுக்கும் ஒரு போலீஸ் உயரதிகாரியாக வருகிறார் கமல்ஹாசன். ஒரு என்வுண்டடரில் போதை கடத்தல் ஆளை கொலை செய்துவிட்டு கடத்தல் பொருளை மீட்கிறார் கமல்ஹாசன்.

அந்த போதை மருந்தை கைப்பற்ற வில்லன் தரப்பினர் கமல்ஹாசனின் மகனை கடத்திச் செல்கிறார்கள். தன் மகனை எப்படி அவர் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் விவகாரத்து பெற்று தகப்பனாக நடிக்கிறாராம் கமல். முன்னாள் மனைவியாக ஆஷா சரத் நடித்திருக்கிறார். ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

தீபாவளியன்று ‘வேதாளம்’ வரும் என்று விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் தன் படமும் வசூலை அறுவடை செய்யும் என்கிற தன்னம்பிக்கையுடன் களத்தில் குதித்துள்ளார் உலக நாயகன்.

படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்..!