‘தொட்ரா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது..!

‘தொட்ரா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது..!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. 

இந்தப் படத்தில் பிருத்விராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா  ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.  இயக்குநர் மதுராஜ் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது. மார்ச் பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரையிலும் கலந்து கொண்டனர்.  நாயகன் பிருத்வி ராஜன், நாயகி வீணா, தயாரிப்பாளர் எம்.எஸ்.குமார், நடிகை மைனா சூசன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

 ஏற்கனவே, எடுக்கப்பட்டிருந்த காட்சிகள்  எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கின்றன. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடுமாம். 

“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்து கொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும், விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்…” என்றனர் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம்.எஸ்.குமாரும்.




error: Content is protected !!