கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..!

கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..!

Two Movie Buff’s நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.எஸ்.ரகுநாதன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.  

இந்தப் படத்தில் பார்த்திபன், கயல் சந்திரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக சாத்னா டைட்டஸ் நடித்துள்ளார். கூடவே டேனியலும், சாம்ஸும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வத், படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ரமணன், கலை இயக்கம் – ரெமியன், பாடல்கள் – நிரஞ்சன் பாரதி, கே.என்.முரளிதரன், சுதர், நடன இயக்கம் – கல்யாண், ஆண்டோ, சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், உடை வடிவமைப்பு – The Dress Shop, ஒப்பனை – ராஜா, ஒலி அமைப்பு – Sync Cinema, தயாரிப்பு இயக்கம் – அண்ணாமலை, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி ஒன், டிசைன்ஸ் – தண்டோரா, நிர்வாகத் தயாரிப்பு – கே.பி.ராம், இணை தயாரிப்பு – ஆர்.சந்திரசேகர், ஜெ.நரேந்திரன், தயாரிப்பு – பி.எஸ்.ரகுநாதன், எழுத்து, இயக்கம் – சுதர்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சுதர் கூறும்போது, “ஐந்து பேர் சேர்ந்து, திருடுறதுக்குத் திட்டம் போடுறதுதான் படத்தோட கதை. திருட்டுல வழக்கமா சொதப்புற கும்பல்னாலும், ஒருகட்டத்துல பெருசா ஒரு திட்டத்துல இறங்குறாங்க.

கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையைத் திருடுறதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக அந்தக் கும்பல் போடும் திட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கோம். ஜாலியாக பரபரன்னு நகரும் படம் இது.

கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனைதான். அதையும் தாண்டி ‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் இதுவரையிலும் சினிமா ரசிகர்கள் யாரும் பார்த்திருக்காத காட்சிகளாக இருக்கும்.  

பொதுவாக அனைத்துத் திரைப்படங்களிலும் செண்டிமென்ட்  காட்சி, அல்லது காதல் காட்சிகள்தான் இருக்கும். நடிகர்கள் மட்டும்தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால், இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். படத்தில் இருக்கும் எந்தவொரு காட்சியையும், வேறு எந்த படத்திலும், எந்த வடிவத்திலும் ரசிகர்கள் பார்த்திருக்கவே முடியாது.  

எங்களது கலை இயக்குநர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார்.  படத்தில் இடம் பெற்றிருக்கும் மியூசியம் செட்டை  அது செட் என்றே தெரியாத வகையில் அவ்வளவு வெண்கல சிற்பங்களை கொண்டு  துல்லியமாக வடிவமைத்து உள்ளார். 

எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்தத் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்…” என்றார். 

இந்தப் படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது.




error: Content is protected !!