ஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…!

ஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…!

அலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மலர்விழி நடேசன் தயாரித்து, இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’.

இப்படத்தில் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் ‘காதல்’ சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ‘ஆடுகளம்’ நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம்.பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – காசி விஷ்வா, இசை – ஜே.வி., நரேஷ் படத் தொகுப்பு – நாகராஜ், கலை இயக்கம் – சோலை அன்பு, எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – மலர்விழி நடேசன்.

‘திருவாளர் பஞ்சாங்கம்’ படம் பற்றி இயக்குநர் மலர்விழி நடேசன் கூறுகையில், “ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான்.

தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம்  மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்துப் பயன்படுத்தித்  தீர்த்துக் கொள்கிறான்.

அந்தக் காலத்தில் திடீரென ஒரு பிரச்சினை அவனுக்கு வர, ஜாதகத்தை பின்பற்ற நினைக்கிறான். இதன் உதவியால் அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளியே வந்தானா.. அல்லது ஜாதகம் அவனை கை விட்டதா.. என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறோம்.  கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம்தான் இத்திரைப்படம்.

இப்படம் முழுக்க, முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது…” என்றார்.




error: Content is protected !!