நவம்பர் 30-ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே-2’ 

நவம்பர் 30-ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே-2’ 

ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயிண்மெண்ட்  கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப் பயலே 2.’ 

ஒளிப்பதிவு – செல்லத்துரை, படத் தொகுப்பு – ராஜா முகமது, கலை இயக்கம் – ஆர்.கே.நாகுராஜ், இசை – வித்யாசாகர், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.மாரியப்பன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ், எழுத்து, இயக்கம் – சுசி கணேசன்.

ஏ.ஜி.எஸ். எண்ட்டர்டெயிண்மெண்ட் – சுசி கணேசன் கூட்டணியில் உருவான ‘திருட்டுப் பயலே’ திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி ‘திருட்டுப் பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்திருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப் பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் வெகு விமர்வசையாக ‘திருட்டுப் பயலே-2’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.