‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..!

‘திருப்பதிசாமி குடும்பம்’ மே 25-ம் தேதி வெளியாகிறது..!

ஜெம்ஸ் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம்.G, மற்றும் ஜே.ஜே.குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பாபுராஜா  இருவரும்  இணைந்து  வழங்கும்  படம்  ‘திருப்பதிசாமி குடும்பம்.’

இந்தப் படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்ய லஷ்மி நடிக்கிறார்.   முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – Y.M.முரளி, இசை – சாம் டி.ராஜ், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, நடனம் – தினேஷ், ஹபீப், சண்டை இயக்கம் – பயர் கார்த்திக், இணை தயாரிப்பு – திருப்பூர் கே.L K.மோகன், தயாரிப்பு – பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப், எழுத்து, இயக்கம் – சுரேஷ் சண்முகம். இவர் ‘அரசு’, ‘கம்பீரம்’ உட்பட பல படங்களை இயக்கியவர்.

படம் பற்றி தயாரிப்பாளர் பாபு ராஜா பேசுகையில், “ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியா இருக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள்.  ஆனால், பணம் இல்லாவிட்டாலும், நேர்மையாக வாழ்ந்தால் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கியது இத்திரைப்படம்.

அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகின்றன. அந்தக் குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும்  புத்திசாலித்தனமாக அந்தப் பிரச்னைகளை சமாளித்து  எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.

‘காக்கா முட்டை’, ‘பசங்க’, ‘கோலிசோடா’ வரிசையில் ‘திருப்பதிசாமி குடும்பமும்’ வெற்றி பெற்று பாராட்டை பெரும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இத்திரைப்படம் வரும் மே 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.