‘திகார்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ரிலீஸ்..!

‘திகார்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ரிலீஸ்..!

பியானோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரேகா மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘திகார்.’

இந்தப் படத்தில் பார்த்திபன் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். இளம் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷா பூரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ்.கே.ஜெயன், ஆகியோரும் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு     –      சேகர்.வி.ஜோசப்

இசை              –      ஆர்.ஏ. ஷபீர்

எடிட்டிங்        –      வி.ஜெய்சங்கர்

நடனம்          –       தினேஷ்

ஸ்டண்ட்         –       தீப்பொறி நித்யா

பாடல்கள், எழுத்து இயக்கம் – பேரரசு.

தயாரிப்பு   –  ரேகா

படம் பற்றி இயக்குனர் பேரரசு பேசும்போது, “நம்பர் ஒன் தாதாவின் வாழ்கையை இதில் பதிவு செய்து உள்ளோம். பார்த்திபன் இந்த படத்தில் படு பயங்கர தாதாவாக நடிக்கிறார். அந்த கதாப்பாத்திரம் வலுவுள்ளதாக இருந்ததால் இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று அவரே பெருமையாக சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்திற்காக சென்னை, கேரளா, துபாய், போன்ற இடங்களில் அதிக பொருட் செலவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதற்கு முன் வெளியான எந்தத் படத்திலும் இப்படியான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் இம்மாதம் 21-ம்  தேதி திரைக்கு வருகிறது.” என்றார்.  
error: Content is protected !!