‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்

‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்

ஜி.எஸ்.எம்.(Grand Service Makers) பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’.

இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனிஷா நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘பிச்சுவா கத்தி’ என்கிற படத்தில் நாயகியாக நடித்தவர்.

இவருடன் ‘அம்பானி’ சங்கர், ‘மகாநதி’ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிப் புலி’  ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Clap Board

ஒளிப்பதிவு - முனீஷ், இசை - ஸ்ரீசாய் தேவ், படத் தொகுப்பு - பாசில், கலை இயக்கம் - கார்த்திக், நடன இயக்கம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை இயக்கம் - எஸ்.ஆர்.முருகன்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான எம்.சித்திக்.

Thenampettai Mahesh 02

இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்கியரஜ், ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் எம்.சித்திக் கூறும்போது, "எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடமும் அடி வாங்குவது என்ற பரிதாப நிலையில் இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. மகேஷ், வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும், ஒரு பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். படத்தின் பிற்பாதியில்தான் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன் பின்பு மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்..." என்றார்.