சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகும் ‘தேடு’ திரைப்படம்

சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகும் ‘தேடு’ திரைப்படம்

கிஷோர் சினி ஆர்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘தேடு’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, ‘உறுதி கொள்’, ‘வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார்.  

இவர்களுடன், தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன், ‘கலக்கப் போவது யாரு?’ பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், ஜெகவீரபாண்டியன், கல்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

தயாரிப்பு – கிஷோர் சினி ஆர்ட், தயாரிப்பாளர் – சிவகாசி முருகேசன், ஒளிப்பதிவு – சபரி, படத் தொகுப்பு – வில்சி, இசை – டி.ஜே.கோபிநாத், பாடல்கள் – இளைய கம்பன், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.முருகன், நடன இயக்கம் – கம்பு முருகன், வடிவமைப்பு – சசி & சசி, நிர்வாக தயாரிப்பாளர்கள் – பா.ஜெயகார்த்திக் & மனோஜ் கார்த்திகேயன், கதை, திரைகதை, வசனம், இயக்கம் – சுசி. ஈஸ்வர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

‘இணைய தலைமுறை’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுசி.ஈஸ்வர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்பு முனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.  மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா… என்பதே இப்படத்தின் கதைக் களம்.




error: Content is protected !!