full screen background image

‘தி லிஸ்ஸி லட்சுமி ஸ்டூடியோஸை’ நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்..!

‘தி லிஸ்ஸி லட்சுமி ஸ்டூடியோஸை’ நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்..!

சென்னையில் உள்ள பிரிவியூ  தியேட்டர்களில் புகழ் பெற்றது நுங்கம்பாக்கம் ‘4 பிரேம்’ தியேட்டர். இப்போது இத்தியேட்டர் நடிகை லிசியின் தலைமையின் கீழ் ‘லீ மேஜிக் லாண்டேர்ன்’ என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த பிரிவியூ தியேட்டருடன் இணைந்து செயல்படும்விதத்தில் புதிதாத டப்பிங் தியேட்டர் ஒன்றும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டப்பிங் தியேட்டருக்கு ‘தி லிஸ்ஸி லட்சுமி ஸ்டூடியோஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளரான ரெசுல் பூக்குட்டி இந்த டப்பிங் தியேட்டரை வடிவமைத்துள்ளார். அவருடைய மேற்பார்வையில் டப்பிங்கிற்கும், ஒலி வடிவமைப்பிற்கும் ஏற்றவாறு பல உன்னதமான தொழில் நுட்ப வசதிகளும், இந்த டப்பிங் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ளது.

6

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முன்னிலையில், உலக நாயகன் கமல்ஹாசனும், ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டியும் இணைந்து இந்த டப்பிங் தியேட்டரை இன்று காலை திறந்து வைத்தார்கள்.

இது போன்ற ஒலிச் சேர்க்கை நிறுவனத்தை வடிவமைத்தது ரெசுல் பூக்குட்டிக்கு இதுதான் முதல் முறை. ஸ்டூடியோவின் அதிபரும், நடிகையும், தொழிலதிபருமான லிசி லட்சுமியின் சமீபத்திய தொழில் முயற்சியான இந்நிறுவனம், ஏற்கனவே களத்தில் உள்ள அவரது ‘லீ மேஜிக் லாண்டேர்ன் ப்ரீவியூ தியேட்டர்’ உடன் இணைந்து ஒரு புதிய, திரைப்பட பணியினை தமிழ்த் திரையுலகிற்குத் தந்திருக்கிறது.

ஸ்டூடியோ துவக்க விழாவில் பேசிய நடிகை லிசி, “ரெசுலுடன் இணைந்து வேலை செய்வது ஒரு பெரும் பாக்கியம்” என்று சொல்லி நெகிழ்ந்தார்.

lyssi

நடிகை லிசி மேலும் பேசுகையில், “ரெசுல் பூக்குட்டியின் உதவியும், வழிகாட்டுதலுமின்றி இந்த ஸ்டுடியோ சாத்தியமேயில்லை.

இம்மாதிரியான ஒரு பன்னாட்டுத் தரம் வாய்ந்த ஒலிச் சேர்க்கை(டப்பிங்) நிறுவனம் அமைப்பதில் உள்ள மிகப் பெரிய சவால்களே சமீபத்திய தொழில் நுட்பமும், சமீபத்திய உபகரணங்களும், சிறந்த செவிப் புலனியல் அமைப்புகளும்தான்.  

பன்னாட்டுத் தரத்தில் இத்தகைய ஸ்டுடியோ வடிவமைப்பதில் மேற்கூறிய மூன்று காரணங்களுமே ஒரு குறிப்பிடத்தக்க செலவு காரணியாகவும், அதே சமயம் சவாலாகவும் இருப்பதால், பெரும்பாலும் இம்மாதிரியான முதலீடுகளில் யாரும் ஈடுபடுவதில்லை.

இங்கு நீங்கள் இங்கு பார்க்கும் ஒவ்வொன்றும், ஓராண்டுக்கும் மேலான எங்களது ஆராய்ச்சி, ஆலோசனை, மற்றும் கடின உழைப்பின் பிரதிபலிப்பு.

இந்தத் தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு, தென்னிந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு பெருமதிப்பு சேர்க்கிறது. நாங்கள் அறிமுகப்படுத்தும் இந்தத் தரம், இங்கு டப்பிங் செய்யப்படும், திரைப்படங்களில் பிரதிபலிக்கும், எதிரொலிக்கும். இது திரை ரசிகர்களுக்கும் ஒரு புதிய ரசிக்கத்தக்க, நிறைவான ஒரு அனுபவத்தை தரும்.

இந்த புதிய ஸ்டூடியோ திறப்பு விழாவின் நினைவாக, ரெசுல் குழுவினர் கமல்ஹாசன், மோகன், சரத்குமார், ராதிகா, ஸ்ரீபிரியா, சுஹாசினி, குஷ்பு, ஷோபனா, ரேவதி மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் பிரபலமான  வசனங்களை பதிவு செய்வார்கள்.

இதனை அடிப்படையாக கொண்டு, ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட இருக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, சென்னையில் உள்ள அனாதைப் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ இருக்கிறோம்…” என்றார் லிசி.

Our Score