full screen background image

விமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..!

விமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..!

‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை இயக்கிய இயக்குநர் மஜீத் அடுத்து இயக்கும் படம் ‘தி புரோக்கர்’.

கான்பிடன்ட் பிலிம் கேஃப்  நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக விமல் நடிக்கிறார். நாயகியாக டயானா சாம்பிகா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் மஜீத், “இது திருமணத்துக்குப்  பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம்  உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை. நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும். நம்பி வாங்க; சந்தோஷமா போங்க..” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Our Score