full screen background image

‘தரமணி’ படத்தின் டீசர் மே 21-ம் தேதி வெளியாகிறது

‘தரமணி’ படத்தின் டீசர் மே 21-ம் தேதி வெளியாகிறது

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ என்று தரமான படங்கள்  கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கி தந்த  இயக்குனர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து, விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று பெயரெடுத்திருக்கும்   ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த ஜே.சதீஷ்குமாருடன் இணைந்து  தமிழ் ரசிகர்களுக்கு அடுத்து  கொடுக்க இருக்கும் படைப்பு ‘தரமணி’.

தரமான வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான, திரைக்கதை தெளிவான படப்பிடிப்பு..  என்று தனக்கென்று தனிப் பாணியை கையாளும் இயக்குநர் ராம் இந்தப் படத்திலும் அவரது  ஆஸ்தான  இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

தரமணியின்  ஆத்மா – The  soul of  Taramani  என்று துவங்கும் ஒரு single  track  ரசிகர்களிடம்  ஏற்கனவே  மிக பிரபலமாகிவிட்டது. யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் ராம், ஜே.சதீஷ் குமார் கூட்டணி ரசிகர்களுக்கு  ‘காலத்தால் அழியாத  பாடல்களை அளித்த கூட்டணி என்பதுக் குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகன் வசந்த் ரவி கதாநாயகனாக அறிமுகாக, ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு  இணையான, போட்டி போட்டு  ஈடு கொடுக்கும்   ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார். நடிப்பில் இவர்களது போட்டி படத்தில் மிகவும் பேசப்படும் அம்சமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இன்றைய சமுதாயத்தின் முக்கிய அங்கமான ஐ.டி. துறையைப் பற்றிய படம்  என்பதால் இந்தப் படம்  இளைஞர்களை  வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score