சென்சாருக்கே சவால் விடும் ‘தரமணி’ படத்தின் புதிய டீஸர்..!

சென்சாருக்கே சவால் விடும் ‘தரமணி’ படத்தின் புதிய டீஸர்..!

J.S.K. பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இயக்குநர் ராம் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீசாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் மற்றொரு புது டீஸர் நேற்று வெளியிடப்பட்டது.

இப்படத்திற்காக தணிக்கை குழு தந்த  ‘A’ சான்றிதழை மையமாக வைத்தே இயக்குனர் ராம், இப்படத்தின் விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும்படியும், சென்சார் குழுவால் அனுமதிக்கப்பட்ட வசனங்களை ஊமைப்படுத்தியும் ஒரு புதுவிதமான, மிகவும் சுவாரஸ்யமான யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குநர் ராம். 

இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழை அளித்துள்ளது. படத்தில் ஆபாசம்  மற்றும் வன்முறை காட்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், கதாநாயகனோ மற்ற ஆண் கதாபாத்திரங்களோ  மது அருந்தும்படியாகவும், சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களாக காண்பித்ததாலும் ஓகேதான்.

ஆனால் ஒரு கதாநாயகி குடிப்பது போலவோ, சிகரெட் பிடிப்பது போலவோ இருப்பதாக காண்பித்தால் அப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் தருவதுதான் தணிக்கை குழுவின் போக்கு என்பதை இந்த டீஸரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கெதிராக நாள்தோறும் நடக்கும் ஈவ் டீஸிங், அதனை இப்பட கதாநாயகி எவ்வாறு துணிச்சலாக கையாள்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இருக்கும் நவீன கலாச்சாரத்தில் வாழும் ஆண் மற்றும் பெண்களின் வாழ்வை உண்மையான பிரதிபலிப்பாக ‘தரமணி’ இருக்கும் எனவும் இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி  ‘தரமணி’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.




error: Content is protected !!